மீண்டும் எழும்பக்கூடிய பலம் எமது கட்சிக்கு உள்ளது: மகிந்த ராஜபக்ஷ

மக்களுக்கான அதிகாரத்தை பெறவும் அதனைத் துறக்கவும் அரசியல் அனுபவம் தமது கட்சிக்கு இருப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு கெம்பல் மைதானத்தில் இன்று நடைபெற்ற கட்சியின் மே தினக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, எந்த நேரத்திலும் மீண்டும் எழும்பக்கூடிய அமைப்பு பலம் தமது கட்சிக்கு இருப்பதாக சுட்டிக்காட்டினார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் மே பேரணி இன்று பிற்பகல் 3 மணிக்கு கொழும்பு கெம்பல் மைதானத்தில் ஆரம்பமானது. "சவால்களை முறியடிப்போம், லட்சியங்களை வெல்வோம்" என்பதே இந்த ஆண்டின் தொனிப்பொருளாகும்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ மற்றும் பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரின் வருகையை அடுத்து பேரணி ஆரம்பமானது.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மகிந்த ராஜபக்ச,
"நாங்கள் கோவிட் மூலம் பொருளாதார சரிவுடன் தொடங்க வேண்டியிருந்தது, சில தவறான முடிவுகள் அதற்கு வழிவகுத்தன, நாங்கள் எங்கே தவறு செய்தோம். இப்போது அனுபவம் மற்றொரு பலம் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்.
கடந்த காலங்களில், நாங்கள் பல அனுபவங்களைப் பெற்றுள்ளோம், மக்களை சந்தித்தோம். இப்போது எங்களிடம் இருப்பது நாட்டை வலுப்படுத்துவது, எதிர்கால சந்ததியினருக்கு நல்ல நாட்டை உருவாக்க வேண்டும்.
நேற்றும், இன்றும், நாளையும் போல், பணியிடத்தில் வியர்வை சிந்தி உழைக்கும் மக்களுக்கு இந்த நாட்டிற்கு பெரும் பொறுப்பு உண்டு என்று நம்புகிறோம்.
பணியிடம் வலுவாக இருந்தால், நாடு வலுவாகும். அனைத்து உழைக்கும் மக்களையும் சவால்களை முறியடித்து நாட்டை வெல்லும் லட்சியத்தை வெல்வதற்கு ஒன்றுபடுமாறு கேட்டுக்கொள்கிறோம். என்றார்.



