வடமேல் மாகாண ஆளுநர்களை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று முயற்சி??

#SriLanka #Tamil People #Lanka4 #Local council
Prabha Praneetha
2 years ago
வடமேல் மாகாண ஆளுநர்களை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று முயற்சி??

மேல் மற்றும் வடமேல் மாகாண ஆளுநர்களை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று முயற்சித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 தற்போதைய மேல்மாகாண ஆளுநராக உள்ள எயார்ஃபோர்ஸ் மார்ஷல் ரொஷான் குணதிலக்க மற்றும் வடமேல் மாகாண ஆளுநராக கடமையாற்றும் அட்மிரல் வசந்த கரன்னாகொட ஆகியோர் இந்த நிலையை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இரண்டு முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகளும், குறித்த மாகாணங்களில் இராணுவம் போன்ற நிர்வாகத்தை நடத்துவதாகக் கூறி, அண்மையில் ஜனாதிபதி தலைமையிலான ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமர்சித்துள்ளனர்.

 எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்ட சட்டவிரோத கட்டிட அனுமதிகள் மற்றும் வர்த்தகர்களின் கோரிக்கைகள் போன்ற ஊழல் முறைகேடுகள் தொடர்பாக ஆளுநர்கள் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்வதே இந்தக் குற்றச்சாட்டுகளுக்குக் காரணம் என செய்தித்தளம் ஒன்று கூறியுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!