சாமர குணசேகர இங்கிலாந்தில் இல்லை?
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
#wijayadasa rajapaksha
Prathees
2 years ago

கொழும்பு கடலில் தீயில் எரிந்து நாசமான எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலுக்கு இழப்பீடு வழங்குவதற்கு பதிலாக லஞ்சம் பெற்றதாக கூறப்படும் சாமர குணசேகர என்ற நபரை இங்கிலாந்தில் கண்டுபிடிக்க முடியாது என சுற்றுச்சூழல் ஆர்வலர் நயனக ரன்வெல்ல தெரிவித்துள்ளார்.
இருபது முப்பது வருடங்களாக நீண்ட காலமாக இங்கிலாந்தில் வாழ்ந்து வரும் மக்களில் சாமர குணசேகர என்ற நபர் இல்லை எனவும் அவர்களில் எவருக்கும் அவ்வாறான நபரை தெரியாது எனவும் அவர் கூறுகிறார்.
இங்கிலாந்தின் சட்டத்தின்படி அந்நாட்டில் உள்ள வங்கியில் இதுபோன்ற பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கவனத்தை திசை திருப்பும் நோக்கிலேயே அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.



