யுக்ரைன் மீது ரஷ்யா ஏவுகணை தாக்குதல்- 34 பேர் காயம்
#Tamil People
#world_news
#Tamilnews
Prabha Praneetha
2 years ago
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் யுக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையில் போர் ஆரம்பமானது.
இவ்விரு நாடுகளுக்குமிடையிலான போர் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றது.
இந்தநிலையில், யுக்ரைன் மீது ரஷ்யா மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏவுகணை வீசி யுக்ரைனின் கிழக்கு நகரில் கடும் தாக்குதலை ரஷ்யா முன்னெடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த தாக்குதலில் 34 பேர் காயமடைந்துள்ளடன்,பல வீடுகளும் சேதமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.