இன்னும் சில தினங்களில் எரிவாயுவின் விலை குறையும்! சாகல ரத்நாயக்க
#SriLanka
#Sri Lanka President
#prices
#Litro Gas
#Gas
Mayoorikka
2 years ago
எரிவாயுவின் விலை இன்னும் சில தினங்களில் குறையும் என ஜனாதிபதி அலுவலகத்தின் பிரதானியும், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் ஆலோசகருமான சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் எமக்கு சாதகமான நம்பிக்கை இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.
"பணவீக்கம் 70% இல் இருந்து 35% ஆக குறைந்துள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் அதை ஒற்றை இலக்கத்திற்கு கொண்டு வர முயற்சிக்கிறோம் என்றார்..
கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கூட்டத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'எண்ணெய் விலை குறைந்துள்ளதால், அடுத்த சில நாட்களில் எரிவாயுவின் விலையும் குறையும் என நம்புகிறோம்' என்றார்.