இந்திய விமானப்படைத் தளபதி இலங்கைக்கு விஜயம்

இந்திய விமானப்படையின் விமானப்படைத் தலைவர் ஏர் சீஃப் மார்ஷல் வி.ஆர். சௌதரி இலங்கைக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமாக இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இலங்கை விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரனவின் அழைப்பின் பேரில் அவர் வருகை தந்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பிரதமர் தினேஷ் குணவர்தன ஆகியோரை மரியாதை நிமித்தமான சந்திப்புக்களை மேற்கொள்ளும் எயார் சீப் மார்ஷல் வி.ஆர்.சௌதாரி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர், பாதுகாப்புப் படைகளின் பிரதானி மற்றும் சேவைத் தளபதிகளை சந்திக்க உள்ளார்.
இந்த விஜயமானது இரு நட்பு அண்டை நாடுகளுக்கிடையிலான வலுவான உறவுகளையும் நெருக்கமான ஒத்துழைப்பையும் அடையாளப்படுத்துகிறது.
இரு நாடுகளுக்கிடையிலான வலுவான நட்புறவை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில், இந்திய அரசாங்கத்தின் (GOI) 250 மில்லியன் மானிய உதவியின் கீழ், திருகோணமலையில் உள்ள இலங்கை விமானப்படை அகாடமியில் இந்தியா-இலங்கை நட்புறவு நட்புறவு கேட்போர் கூடத்திற்கான அடிக்கல்லை எயார் சீஃப் மார்ஷல் சௌதாரி நடவுள்ளார்.



