சிரியாவில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது ஐ. எஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல்

#இலங்கை #Tamilnews #sri lanka tamil news #Turkey
Soruban
2 years ago
சிரியாவில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது ஐ. எஸ் அமைப்பின் தலைவர் கொல்லப்பட்டதாக தகவல்

சிரியாவில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கையின் போது ஐ. எஸ் அமைப்பின் தலைவர் அபு ஹுசைன் அல் குராஷி கொல்லப்பட்டுள்ளதாக துருக்கி ஜனாதிபதி தையிப் எர்டோகன் தெரிவித்துள்ளார் .

 இந்த வார இறுதியில் துருக்கியப் படைகளால் சிரியாவில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் அல்-குராஷி “கொல்லப்பட்டார்” என்று துருக்கிய ஜனாதிபதி ரெசெப் தையிப் எர்டோகன் ஞாயிற்றுக்கிழமை இரவு அறிவித்தார்.

 துருக்கி எல்லையில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில், டிரேஸ் அருகே உள்ள கிராமத்தில் உள்ள ஒரு வீட்டை துருக்கியப் படைகள் சனிக்கிழமை அதிகாலை ஒரு மணியவில் தாக்கியதாக உள்ளூர் பத்திரிகையாளர்கள் தெரிவித்தனர்.

 துருக்கியப் படைகள் அந்த பகுதியில் ஐஎஸ்ஐஎஸ் போராளிகளுடன் மோதியதுடன், சரணடைய மறுத்த அல்-குராஷியைச் சுற்றி வளைத்தனர்.

 பின்னர் அல்-குராஷி தனது உடலில் கட்டியிருந்த வெடிமருந்துகளை வெடிக்கச் செய்ததாக கூறப்படுகின்றது.

 அல்-குராஷி நவம்பரில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் நான்காவது தலைவராக தெரிவானார். அப்போது அந்த அமைப்பு முன்னாள் தலைவரின் மரணத்தை அறிவித்திருந்ததுடன், புகைப்படங்கள் எதுவும் வெளியாகி இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!