பயங்கர விபத்து: இராணுவ சிப்பாயும் இளைஞனும் பலி

கபிதிகொல்லேவ பிரதேசத்தில் கடமைக்காக சென்றுவிட்டு ஹெரோவ்பொதானை நோக்கி திரும்பிக்கொண்டிருந்த கார் ஏ-29 வீதியில் கிவுலகடவல பிரதேசத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்துக்குள்ளான காரில் மூன்று பேர் பயணித்துள்ளதுடன், விபத்தில் காயமடைந்த இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
கார் இரண்டு மாடுகளுடன் மோதியதுடன், பின்னர் பாலத்தில் மோதியதில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று (30) இரவு 9.50 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் 22 வயதுடைய இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் ஹொரோவ்பொத்தானை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் 19 வயதுடைய இளைஞரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த கார் சாரதியான 30 வயதுடைய உதயங்க பண்டார மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
33 வயதுடைய சிப்பாய் மற்றும் ஹொரோவ்பொத்தானை, நிக்கேவ பிரதேசத்தில் வசிக்கும் 19 வயது இளைஞன் ஆகியோரே விபத்தில் உயிரிழந்தனர்



