குறைக்கப்பட்ட எரிபொருள் விலையுடன் பாடசாலை வேன் கட்டணத்தை குறைக்கவுள்ளதாக தகவல்
#SriLanka
#Lanka4
#Tamilnews
#School Student
#Local council
#school van
Prabha Praneetha
2 years ago
குறைக்கப்பட்ட எரிபொருள் விலையுடன் பாடசாலை வேன் கட்டணத்தை குறைக்கவுள்ளதாக அகில இலங்கை பாடசாலை வாகன ஓட்டுநர்கள் சங்கத்தின் (AISVOA) தலைவர் மல்சிறி டி சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்கள் மற்றும் நேற்றுடன் ஒப்பிடுகையில் டீசல் விலைகள் மொத்தமாக குறைக்கப்பட்டுள்ளதை கருத்திற் கொண்டு, பாடசாலை வேன் மாதாந்த கட்டணத்தை திருத்தியமைக்க வேண்டும் என தெரிவித்தார்.
எவ்வாறாயினும், கட்டணத் தொகையை மீளாய்வு செய்வது குறித்த தீர்மானம் குழு கூட்டத்தின் பின்னர் நாளை எடுக்கப்படும் என சில்வா தெரிவித்தார்
.
"தற்போதைய பொருளாதார நெருக்கடியால் பெற்றோர்கள் சோர்ந்து போயுள்ளதால், சமீபத்திய எரிபொருள் விலைக் குறைப்பின் பலனை நாங்கள் அவர்களுக்கு வழங்க வேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.