தொழிலாளர் தினம்: கொழும்பில் பலத்த பாதுகாப்பு

#SriLanka #Sri Lanka President #Colombo #Police #may day
Mayoorikka
2 years ago
தொழிலாளர் தினம்: கொழும்பில் பலத்த பாதுகாப்பு

தொழிலாளர் தினமான இன்று கொழும்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

 இலங்கையில் நடைபெறவுள்ள அரசியல் கூட்டங்களுக்கு சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து அவர் இதனை தெரிவித்தார்.

 கொழும்பு, நுகேகொடை, ஹட்டன் மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். மேலும், குறித்த பிரதேசங்களில் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு தொடர்பிலும் அதிக கவனம் செலுத்தப்பட்டு விசேட வேலைத்திட்டமொன்று நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 கொழும்பில் நடைபெறும் மே தினப் பேரணிகள் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்காக 3,500 பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!