சிறந்த எதிர்காலத்திற்காக பாடுபடுவோம்: பிரதமர்

#SriLanka #Dinesh Gunawardena #Lanka4 #sri lanka tamil news #may day
Prathees
2 years ago
சிறந்த எதிர்காலத்திற்காக பாடுபடுவோம்: பிரதமர்

உழைக்கும் மக்களின் இரத்தத்தாலும் வியர்வையாலும் போஷிக்கப்பட்ட வரலாற்றைக் கொண்ட நாட்டில் 137ஆவது சர்வதேச தொழிலாளர் தினத்தை இலங்கையர்களாகிய நாம் கொண்டாடுவோம் என பிரதமர் தினேஷ் குணவர்தன தனது மே தினச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தனது மே தின வாழ்த்துச் செய்தியில்,

வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத பொருளாதார நெருக்கடியை நினைவுபடுத்தும் வகையில் இன்று நாம் தொழிலாளர் தினத்தை கொண்டாடுகிறோம்.

இவ்வாறான நெருக்கடிகளை எதிர்கொண்ட உலகில் பல நாடுகள் உழைக்கும் மக்களின் பலத்தால் மீளக் கட்டமைக்கப்பட்டன.

அந்தப் பெரிய சொத்து எங்களுக்கும் பரிசாக இருக்கிறது. நமது பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்ப விவசாயிகள் முன்முயற்சி எடுத்தனர்.

முதலில், நாட்டை தன்னிறைவு அடையச் செய்வதில் விவசாயிகள் முன்னிலை வகித்தனர். இதனால் ஒவ்வொரு துறையிலும் புதிய எழுச்சி ஏற்பட்டது.

எனவே, உலக தொழிலாளர் தினத்தில், நாங்கள் இருந்ததை விட சிறந்த எதிர்காலத்திற்காக பாடுபடுவோம்.

எந்த ஒப்பந்தத்தின் பெயராலும் உழைக்கும் மக்களின் உரிமைகளை புறக்கணிக்க மாட்டோம். அரசாங்கம், முதலாளி மற்றும் பணியாளர் என்ற முத்தரப்பு உரையாடல் மூலம் எடுக்கப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் முன்னேறுவோம்.

நமது நாட்டின் உழைக்கும் மக்களுக்கு நாம் பல வெற்றிகளை வழங்கியுள்ளோம்.

இந்த உலக தொழிலாளர் தினத்தில், அந்த வெற்றிகளின் அடிப்படையில் நாட்டை வளரும் பொருளாதாரமாக மாற்றுவோம், சதிகார சக்திகளின் முயற்சிகளை முறியடிப்போம், கடுமையாக வென்றெடுக்கப்பட்ட உரிமைகளைப் பாதுகாப்போம், நமது தாய்நாட்டைக் கட்டியெழுப்புவோம் என்று தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!