தொழிலாளர் பெருமக்களே எமது தேசத்தின் சிற்பிகள்! லங்கா4 இணையத்தளத்தின் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்

உடலினை இயந்திரமாக்கி, உழைப்பினை உரமாக்கி, உலகத்தை இயங்க வைக்கின்றார்கள் தொழிலார்கள்.
தொழிலாளர்களின் பங்களிப்பை கௌரவிக்கும் விதமாக, ஆண்டுதோறும் மே மதம் 1ம் திகதி உலக தொழிலாளர் தினமாக கடைப்பிடிக்கப்படுகின்றது. . உழைப்பவரே உலகில் உயர்ந்தவர் என்பதை உரக்கச் சொல்லி உலகை இயக்கிவருபவர்கள் தொழிலாளர்கள்.
காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்' என்றார் பாவேந்தர். நமது அன்றாட வாழ்க்கைக்குப் பின்னால் நாமறியாத பல்லாயிரம் தொழிலாளர்களின் கைகள் உள்ளன என்பதை உணர்வதும், அவர்களின் உழைப்பைப் போற்றுவதும், உரிமைகளை உறுதி செய்வதும் கடடாயமானதாகும்.
உழைப்பால்தான் இந்த உலகம் உயர்ந்திருக்கிறது. உழைப்பாளிகளும் உயர்த்தப்பட வேண்டும். தொழிலாளர்களுக்கு "8 மணி நேர வேலை, 8 மணி நேர ஓய்வு, 8 மணி நேர தூக்கம்' என்ற வகையில் இருக்க வேண்டும் என இத் தினம் வலியுறுத்துகின்றது.
19ம் நூற்றாண்டில், வளர்ந்த நாடுகளில், 12 மணி நேரம் முதல் 18 மணி நேரம் கட்டாய வேலை என்று இருந்தது. இதை எதிர்த்து, தொழிலாளர்கள் சார்பில், பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.
இத்தினத்தில், உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர் சங்கங்கள், பேரணி மற்றம் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்துகின்றனர். இந்த நிலையில் தமிழர் தாயகத்தில் உள்ள ஒட்டு மொத்த தொழிலாளர்களும் தங்களது உரிமைகளை இழந்து ஒடுக்கப்படுகின்ற சமூகமாக தொடர்ந்தும் தங்கள் வாழ்வில் போராடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஒரு தொழிலாளி படைப்பாளியாக இருக்கிறான். தொழிலாளி ஒவ்வொரு தேசத்திற்கும் ஒரு பெரிய சொத்து. உலகிலிலுள்ள தொழிலாளர்கள் அனைவருக்கும் லங்கா4 இணையத்தளத்தின் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.



