ஆயுள் தண்டனையை அறிமுகப்படுத்தும் புதிய சட்டமூலத்தில் கையெழுத்திட்ட புட்டின்

#Russia #Law #Putin
Prasu
2 years ago
ஆயுள் தண்டனையை அறிமுகப்படுத்தும் புதிய சட்டமூலத்தில் கையெழுத்திட்ட புட்டின்

தேசத் துரோகத்திற்காக ஆயுள் தண்டனையை அறிமுகப்படுத்தும் சட்டத்தில் ரஷ்ய அதிபர் புடின் கையெழுத்திட்டார்.

இதன்படி தேசத்துரோக குற்றவாளிகள் என்று நிரூபிக்கப்பட்ட ரஷ்யர்களுக்கு இப்போது ஆயுள் தண்டனை வழங்கப்படும் என தெரியவருகிறது.

உக்ரைனில் போர் தொடங்கியதில் இருந்து அதிருப்தியை நசுக்கும் உந்துதலின் ஒரு பகுதியான இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிரெம்ளின் கூறியுள்ளது.

அதேநேரம் இந்த சட்டமூலத்தின் மூலம் தேசத்துரோகம், பயங்கரவாதம் மற்றும் சர்வதேச அமைப்புகளின் பணிக்கு உதவுதல் ஆகியவற்றுக்கான அபராதங்களை அதிகரிக்கிறது. அதுமாத்திரம் அன்றி சட்டமியற்றுபவர்கள் ஏற்கனவே தேசத்துரோகத்திற்கான மிக நீண்ட தண்டனையை 20 ஆண்டுகளில் இருந்து ஆயுள் வரை அதிகரிக்க வாக்களித்துள்ளனர்.

“பயங்கரவாதச் செயலை” மேற்கொள்வதற்கான அதிகபட்ச தண்டனையை 15 ஆண்டுகளில் இருந்து 20 ஆண்டுகளாக அதிகரிக்கவும் சட்டமன்ற உறுப்பினர்கள் ஒப்புதல் அளித்தனர்.

 இதன்கீழ் நாச வேலைகளை செய்வதற்கு 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை வழங்கப்படும் என்பதுடன், 12 ஆண்டுகள் வரை ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!