கர்நாடகா தேர்தல் : 50 லட்சம் பாஜக தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

#India #D K Modi #Election
Mani
3 years ago
கர்நாடகா தேர்தல் :  50 லட்சம் பாஜக தொண்டர்கள் மத்தியில் பிரதமர் மோடி உரையாற்றுகிறார்!

கர்நாடகா தேர்தல் பிரச்சாரக் கூட்டங்கள் மும்முணையாக நடந்து கொண்டுள்ளது, மைசூரில்  இன்று பிரதமர் மோடி தொண்டர்கள் மத்தியில் உரையாற்றுகிறார் இன்று காலை ஒன்பது முப்பது மணி முதல் 10:30 மணி வரை பாஜக தொண்டர்களுக்கு இடையே தேர்தல் பரப்புரையாற்றுகிறார் மோடி

இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் கர்நாடக மாநில முன்னாள் அமைச்சர்கள்  மத்திய தலைவர்கள் மற்றும் கர்நாடகாவில் ஒவ்வொரு நகரத்திலிருந்தும் 50 லட்சம் தொண்டர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இக்கூட்டத்தின் முக்கிய பொறுப்பாளர்களான கர்நாடகா பிஜேபி பொறுப்பாளர் அருண் சிங் மைசூரிலும் தேர்தல் பொறுப்பாளரான தர்மேந்திர பிரதான் தலைமையில் கர்நாடகா உள்ள அனைத்து மாவட்டத்தில் இருந்தும் தொண்டர்களை அழைத்தவரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் கர்நாடகாவின் பொறுப்பாளர் அருண் சிங் போன்ற அதன் தலைவர்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், பாஜக தனது முழு பலத்தையும் இன்று பிரச்சாரத்தில் செலுத்தியுள்ளதாக தெரிகிறது.

 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4