மேல் மாகாணத்துக்கு மாத்திரம் இறக்குமதி முட்டைகளை விநியோகிக்க அனுமதி!

#Egg #Tamil People #Tamil #Tamilnews #sri lanka tamil news #srilankan politics
Prabha Praneetha
2 years ago
மேல் மாகாணத்துக்கு மாத்திரம் இறக்குமதி முட்டைகளை  விநியோகிக்க அனுமதி!

இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகளை மேல் மாகாணத்துக்கு மாத்திரமே விநியோகம் செய்வதற்கு கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் அனுமதி வழங்கியுள்ளதாக அரச வணிக பல்நோக்கு கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

ஏனைய மாகாணங்களில் உள்ள பாரியளவான வெதுப்பக மற்றும் உணவகங்களில் இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு பாரிய கேள்வி உள்ளதாக அதன் தலைவர் ஆசிர வலிசுந்தர தெரிவித்தார்.

தேவைக்கு ஏற்ற வகையில் விநியோகத்தை வழங்க முடியும் என்றாலும் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் அனுமதி கிடைக்காமை பிரச்சினையாக உள்ளதாக தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, கடந்த 15ஆம் திகதி நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட 10 இலட்சம் முட்டைகள், இன்று மேல் மாகாணத்தில் உள்ள பாரியளவான வெதுப்பக மற்றும் உணவக உரிமையாளர்களுக்கு விநியோகப்படவுள்ளன.

அத்துடன், கடந்த 19 ஆம் திகதி இறக்குமதி செய்யப்பட்ட 10 லட்சம் முட்டைகள் மாதிரிகள் இன்றைய தினம் பரிசோதனைக்கு  அனுப்பப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!