வெப்பமான காலநிலை முடிவுக்கு வருவதற்கான அறிகுறிகள்!
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
#srilankan politics
#Tamil People
#TamilCinema
#Tamilnews
#Tamil
#weather
Prabha Praneetha
2 years ago

கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த மாகாணங்களின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.
ஏனைய மாகாணங்களில் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.
மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.



