மேக் இன் இந்தியா திட்டம் உலகளவில் வெற்றிகரமாக முன்னேறி வருவதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

#India #PrimeMinister
Mani
2 years ago
மேக் இன் இந்தியா திட்டம் உலகளவில் வெற்றிகரமாக முன்னேறி வருவதாக பிரதமர் மோடி பாராட்டியுள்ளார்.

இந்தியாவில் உற்பத்தித் துறையை மேம்படுத்த உதவும் வகையில், 'மேக் இன் இந்தியா' திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இது உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிப்பதில் கவனம் செலுத்துகிறது.

இந்நிலையில், ஆப்ரிக்க நாடான மொசாம்பிக் சென்ற வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு போக்குவரத்து துறை அமைச்சருடன், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ரயிலில் பயணம் செய்தார். இந்த தகவலை அவர் தனது டுவிட்டரில் பெருமிதத்துடன் தெரிவித்தார். ஜெய்சங்கரின் பதிவை தனது ட்விட்டர் தளத்தில் வெளியிட்ட பிரதமர் மோடி, “இது அனைத்து இந்தியர்களையும் மகிழ்ச்சியடையச் செய்யும்! உலக அளவில் மேக் இன் இந்தியா திட்டத்தில் தொடர்ந்து முன்னேறி வருகிறார்.

மேலும், மும்பையில் நடைபெற்ற சிறுதானிய உணவுத் திருவிழாவை பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பாராட்டியுள்ளார். இது பாராட்டத்தக்க முயற்சி என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த விழா தொடர்பாக மராட்டிய எம்பி மனோஜ் கோடக் அறிவிப்பு வெளியிட்டார்.

மகாராஷ்டிர மாநிலம் விதர்பா பகுதியில் 6 சாலை மேம்பாலங்கள் திறக்கப்பட்டது குறித்தும் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், காசி விஸ்வநாதர் கோயில் மற்றும் பிஹு கொண்டாட்டங்கள் குறித்து பல்வேறு தரப்பினரின் ட்விட்டர் பதிவுகளுக்கு பிரதமர் மோடி பதிலளித்தார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!