ரூ. 2 கோடி மதிப்புள்ள பொருட்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

#Flight #Chennai #India
Mani
3 years ago
ரூ. 2 கோடி மதிப்புள்ள பொருட்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல்

அபுதாபி, துபாய் நாடுகளில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட, ரூ. 2 கோடி மதிப்புடைய 3 கிலோ தங்கம், ஐ ஃபோன்கள், வெளிநாட்டு சிகரெட்டுகள், மின்னணு சாதனங்கள் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டு, நான்கு பயணிகளை, சுங்கத்துறை கைது செய்து விசாரணை.

துபாயில் இருந்து எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். பின்னர் சென்னையில் இருந்து 4 ஆண் பயணிகள் குழு சுற்றுலா விசாவில் அபுதாபி சென்று விட்டு இந்த விமானம் மூலம் சென்னை திரும்பினர்.

சுங்க அதிகாரிகளுக்கு அவர்கள் 4 பேர் மீதும் சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை நிறுத்தி விசாரித்தனர்.

அவர்களது உடமைகளான சூட்கேஸ்கள், பைகள், செல்போன்கள், ஐபோன்கள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் ஆகியவை சோதனை செய்யப்பட்டு உள்ளே மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 25 லட்சம். அவற்றை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். கைது செய்து 4 பேரிடமும் சுங்க அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்துகின்றனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4