சி.ஏ.பி.எப் தேர்வு தமிழிலும் நடத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

#exam #Examination #Tamil #Tamil Nadu #Tamil People
Mani
3 years ago
சி.ஏ.பி.எப் தேர்வு தமிழிலும் நடத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

நாடு முழுவதும் உள்ள பல்வேறு ஆயுதப் படைகளில் ஆட்களை சேர்ப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சி.ஏ.பி.எப். (CAPF - Central Armed Police Force ) தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த தேர்வு இந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் மட்டும் நடத்தப்பட்டு வருகிறது.

ஒன்றிய உள்துறை அமைச்சகம் இன்று (ஏப்ரல் 15) வெளியிட்ட அறிவிப்பில், இனி வரும் காலங்களில் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமல்லாமல் தமிழ் உள்ளிட்ட 13 பிராந்திய மொழிகளையும் சேர்த்து சி.ஏ.பி.எப். தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

நாடு முழுவதும் வரும் 2024 ஜனவரி 1ஆம் தேதி சி.ஏ.பி.எப். தேர்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4