மராட்டிய மாநிலத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.

#India #Bus #Accident
Mani
2 years ago
மராட்டிய மாநிலத்தில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உயிரிழந்தனர்.

மும்பையில் இருந்து மகாராஷ்டிரா மாநிலம் புனே சென்ற தனியார் பேருந்து லோனாவாலா அருகே இன்று விபத்துக்குள்ளானது. மும்பை-புனே நெடுஞ்சாலையில் உள்ள லோனாவாலா பகுதி அருகே அதிகாலை 4:30 மணியளவில் பேருந்து சென்று கொண்டிருந்த போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

விபத்துக்குள்ளான போது பேருந்தில் குறைந்தது 40 பயணிகள் இருந்தனர். 8 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும், மேலும் 25 பயணிகள் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!