நீராடச் சென்றிருந்த மாணவன் சடலமாக மீட்பு!

#SriLanka #Death #Student #School Student #College Student #Tamilnews #sri lanka tamil news
Mayoorikka
2 years ago
 நீராடச் சென்றிருந்த மாணவன் சடலமாக மீட்பு!

அக்குரஸ்ஸ கடற்கரையில் நேற்று (13) பிற்பகல் நீராடச் சென்றிருந்த வேளையில் நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போன மாணவனின் சடலம் இன்று (14) கண்டெடுக்கப்பட்டதாக அம்பலாங்கொடை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அம்பலாங்கொட தர்மசோக வித்தியாலயத்தில் 11ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 17 வயதுடைய  எச்.பி.சஞ்சன என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த மாணவனுடன் மேலும் இரு மாணவர்கள் கடலில் அடித்துச் செல்லப்பட்டதுடன், ஏனைய இருவரையும் பிரதேசவாசிகள் காப்பாற்றியுள்ளனர்.

மீட்கப்பட்ட இரு மாணவர்களும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

புத்தாண்டு விடுமுறை காரணமாக நண்பர் ஒருவரின் வீட்டிற்கு செல்வதாக வீடுகளுக்கு தெரிவித்துவிட்டு இந்த மூன்று மாணவர்களும் கடலில் குளிக்கச் சென்று கொண்டிருந்த போது திடீரென ஏற்பட்ட அலையில் அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அம்பலாங்கொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!