அரசு பேருந்து ஓட்டுநருக்கு விநோத மெமோ..! ஓட்டுநர் அமரும் இருக்கைக்குப் பின்பகுதியில், முகம் துடைக்கும் துண்டை விரித்து போட்டிருந்தது குறித்து விளக்கம் கேட்பு..

#Tamil Nadu #Tamil People #Tamil #Tamilnews
Mani
3 years ago
அரசு பேருந்து ஓட்டுநருக்கு விநோத மெமோ..! ஓட்டுநர் அமரும் இருக்கைக்குப் பின்பகுதியில், முகம் துடைக்கும் துண்டை விரித்து போட்டிருந்தது குறித்து விளக்கம் கேட்பு..

நாகர்கோவிலில், அரசு பேருந்து ஓட்டுநருக்கு விநோத காரணம் காட்டி மெமோ வழங்கப்பட்டிருப்பது போக்குவரத்து ஊழியர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் ஊழியர்கள் தரப்பில் ஏதேனும் தவறு தென்பட்டால் நிர்வாகத்தால் மெமோ வழங்குவது வழக்கம்.

இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் பகுதியில் உள்ள செட்டிகுளம் போக்குவரத்து கழக பணிமனையின் கீழ் பேருந்து ஓட்டும் ஜெயக்குமார் என்ற ஓட்டுனருக்கு அதிகாரி வழங்கிய மெமோ போக்குவரத்து ஊழியர்களிடையே விவாத்திற்கு உள்ளாகி உள்ளது.

பேருந்தில் உள்ள ஓட்டுநர் இருக்கைக்குப் பின்பகுதியில் அவரது முகம் துடைப்பதற்கான துண்டை விரித்துப் போட்டிருந்ததால் அது தொடர்பாக உயர் அதிகாரி மெமோ வழங்கியுள்ளார்.

அந்த மெமோவில் அவரது தவறு குறித்து எழுதப்பட்டிருந்த நிலையில், தற்போது அந்த மெமோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4