முன்கோபத்தால் நட்பை இழந்து , திட்டமிட்டு செயல்பட வேண்டிய மீன ராசியினர் - இன்றைய நாள்பலன்

#இன்றைய_ராசிபலன் #ராசிபலன் #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 years ago
முன்கோபத்தால் நட்பை இழந்து , திட்டமிட்டு செயல்பட வேண்டிய மீன ராசியினர் - இன்றைய நாள்பலன்

மேஷம்
மறைந்து கிடந்த திறமைகள் வெளிப்படும். சகோதரர்கள் வகையில் உதவிகள் கிடைக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் பலிதமாகும். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவு கிடைக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.

ரிஷபம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளை புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். தொட்டது துலங்கும் நாள்.

மிதுனம்
புதிய திட்டங்கள் தீட்டுவீர்கள். பிள்ளைகளின் தனித்திறமைகளை கண்டறிவீர்கள். செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். நீண்டநாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்கள் உதவுவார்கள். உத்தியோகத்தில் மேல் அதிகாரிகள் உங்களுக்கு உதவுவார்கள். உங்கள் கனவுகள் நனவாகும் நாள்.

கடகம்
சில முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபங்கள் வந்து நீங்கும். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். சிற்பகலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணர்வீர்கள்.  உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி உண்டு. உழைப்பால் உயரும் நாள்.

சிம்மம்
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். சொத்துப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.  விருந்தினர் வருகையால் வீடு களைக்கட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்கள் தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார்கள். பெருந்தன்மையுடன் நடந்துக் கொள்ளும் நாள்.

கன்னி
கணவன் - மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். புது முடிவுகள் எடுப்பீர்கள். புதிய நட்பால் உற்சாகமடைவீர்கள். மிக விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். நேர்மறை எண்ணங்கள் பிறக்கும். வியாபாரத்தில் புதிய சரக்குகள் கொள்முதல் செய்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். நிம்மதியான நாள்.

துலாம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால், எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். கணவன் - மனைவிக்குள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. உதவி செய்வதாக வாக்குக் கொடுத்தவர்கள் சிலர் இழுத்தடிப்பார்கள். உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகமாகும். போராட்டமான நாள்.

விருச்சிகம்
சில காரியங்களை அலைந்து திரிந்து முடிக்க வேண்டிய சூழல் உருவாகும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் சங்கடங்கள் வரும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

தனுசு
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பிள்ளைகளால் உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும்‌. சேமிக்க வேண்டுமென்ற எண்ணம் வரும். உங்களுடைய எதிர்பார்ப்புகளுக்கு தகுந்தாற் போல் ஒருவர் அறிமுகமாவார். வியாபாரம் தழைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். சிறப்பான நாள்.

மகரம்
எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு உதவுவார்கள். பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப் பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் கடையை புது இடத்திற்கு மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் பாராட்டப்படுவீர்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.

கும்பம்
குடும்பத்தாரின் எண்ணங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். புது அத்தியாயம் தொடங்கும் நாள்.

மீனம்
சந்திராஷ்டமம் இருப்பதால் உடல் அசதி மனச்சோர்வு வந்து நீங்கும். உறவினர்கள் நண்பர்களால் அன்புத் தொல்லைகள் உண்டு. முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழந்து விடாதீர்கள். உறவினர்கள் உதவி கேட்டு தொந்தரவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்களை விட்டுப் பிடிப்பது நல்லது.  திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4