வடக்கு மாகாணத்தின் ஏற்றுமதியை அதிகரிக்க 2027இல் மாநாடு!

#SriLanka #NorthernProvince #Meeting #government #Export #LANKA4
Abi
1 hour ago
வடக்கு மாகாணத்தின் ஏற்றுமதியை அதிகரிக்க 2027இல் மாநாடு!

வடக்கு மாகாணத்தின் ஏற்றுமதி வாய்ப்புகளை விரிவுபடுத்தி, மாகாணத்தின் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கான பங்களிப்பை 4.5 வீதத்திலிருந்து 10 வீதமாக உயர்த்தும் நோக்கில், வடக்கு ஏற்றுமதியாளர்கள் மாநாடு 2027 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த மாநாடு 2027 ஜனவரி 20, 21ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.

இதற்கான உத்தியோகபூர்வ அறிமுக நிகழ்வு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் இன்று (29) ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.

விவசாயம், கடற்றொழில், பனைசார் உற்பத்திகள், கைத்தறி மற்றும் கைவினைப் பொருட்கள், தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா உள்ளிட்ட துறைகளின் உற்பத்தியாளர்களுக்கு சர்வதேசச் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்துவதே மாநாட்டின் முக்கிய நோக்கமாகும்.

உள்ளூர் உற்பத்தியாளர்களையும் வெளிநாட்டுக் கொள்வனவாளர்களையும் நேரடியாக இணைக்கும் வகையில் கண்காட்சிகள், வர்த்தகச் சந்திப்புகள் மற்றும் ஏற்றுமதி தொடர்பான பயிற்சிகளும் நடத்தப்படவுள்ளன. 

இதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில் முயற்சியாளர்களின் திறன்களை மேம்படுத்தி, புதிய சந்தைகளுக்குள் நுழைவதற்கான வாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், முதலீட்டாளர்கள் அனுமதிகளைப் பெறுவதில் எதிர்கொள்ளும் சிரமங்களைக் குறைக்கும் நோக்கில், வடக்கு மாகாண ஆளுநர், வவுனியா பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் இலங்கை முகாமைத்துவக் கழகத்தின் பிரதிநிதி ஆகியோருக்கிடையில் முத்தரப்பு ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.

அத்துடன், வடக்கு மாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் பாடசாலைத் தோட்டங்களை அமைக்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது.

இலங்கை முகாமைத்துவக் கழகத்தின் ஏற்பாட்டில், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சின் தலைமையில், இந்தியத் துணைத் தூதரகம் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் ஒத்துழைப்புடன் இந்த மாநாடு முன்னெடுக்கப்படவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!