தீர்ப்பு சொன்ன நீதிபதி நாக்கு அறுப்போம் காங்கிரஸ் கட்சியினர் ஆவேசம்

#India #Tamil Nadu #Tamil People #Tamilnews #TamilNadu President #TamilNadu Police
Mani
2 years ago
தீர்ப்பு சொன்ன நீதிபதி நாக்கு அறுப்போம் காங்கிரஸ் கட்சியினர் ஆவேசம்

பெங்களூருவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி, பாரத பிரதமர் மோடியை பற்றி பேசிய தவறான கருத்தால் அவர் மீது வழக்கு புனையப்பட்டது.

 விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த வழக்கின் தீர்ப்பு சில வாரங்களுக்கு முன்பு வெளியானது அதீர்ப்பில் பிரதமர் மோடியை குறித்து அவதூறாக பேசிய வழக்கின் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது எம்பி பதவியும் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். குறிப்பாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடந்து வருகிறது.

ராகுல் காந்தி சிறை தண்டனை விதிக்கப்பட்டு மற்றும் ராகுல் காந்தியின் எம்.பி பதவியை பறிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து திண்டுக்கல் மாவட்டம் எஸ் சி எஸ் டி பிரிவு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டது அதில் மக்கள் அமைதியாக இருக்கின்றார்கள் என நினைக்கிறீர்களா?

மக்கள் அனைவரும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் விரைவில் இதற்கு முடிவு எட்டப்படும், பாஜக நாட்டை விட்டு விரட்டுவோம். அதைத்தொடர்ந்து தீர்ப்பு கூறிய நீதிபதியின் நாக்கு அறுப்போம்  என காங்கிரஸ் கட்சியின் திண்டுக்கல் மாநகர மாவட்ட தலைவர் துரை மணிகண்டன் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!