நடிகர் பிரகாஷ் ராஜ்: கன்னட நடிகர் கிச்சா சுதீப் பாஜகவுக்கு ஆதரவளிப்பது குறித்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்

#Tamilnews #Breakingnews #Tamil Nadu #TamilCinema
Mani
3 years ago
நடிகர் பிரகாஷ் ராஜ்: கன்னட நடிகர் கிச்சா சுதீப் பாஜகவுக்கு ஆதரவளிப்பது குறித்த செய்தியறிந்து அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன்

கன்னட திரையுலகின் முக்கிய நடிகரான கிச்சா சுதீப், சமீபத்தில் அரசியல் அழைப்பு வந்ததை ஒப்புக்கொண்டார். பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் கட்சிகளை சேர்ந்த பிரபலங்கள் அவரை சந்தித்ததாக பரவலாக பேசப்பட்டு வந்தது, இதனை தொடர்ந்து கிச்சா சுதீப் பாஜகவில் இணையப்போவதாக செய்தி வெளியாகி திரையுலகம் மற்றும் அரசியல் வட்டாரங்களில் பரவியது.

இதைத்தொடர்ந்து, பெங்களூரில் கர்நாடக முதல் மந்திரி பசவராஜ் பொம்மையுடன் செய்தியாளர்களை சந்தித்த கிச்சா சுதீப் வருகின்ற கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக சார்பாக பிரசாரம் செய்யவுள்ளதாகவும் தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில், கிச்சா சுதீப்பின் இந்த அறிவிப்பால் தான் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்துள்ளதாக நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

இன்று காலை கிச்சா சுதீப் பா.ஜ.க. பிரசாரத்தில் ஈடுபடவுள்ளதாக செய்தி அறிந்ததும் பிரகாஷ் ராஜ் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "கர்நாடகாவில் தோல்வி முகம் காண கூடிய மற்றும் நம்பிக்கையற்ற பா.ஜ.க.வால் பரப்பப்படும் போலியான செய்தியாக இது இருக்கும் என நான் உறுதியாக நம்புகிறேன்" என பதிவிட்டிருந்தார். தற்போது இது உறுதியான நிலையில், பா.ஜ.க.வுக்கு ஆதரவான நிலைப்பாட்டை சுதீப் எடுத்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என வேதனையுடன் தெரிவித்து உள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4