இன்றைய வேத வசனம் 06.04.2023: உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்

#Bible #today verses #Holy sprit #Lanka4 #spiritual
Prathees
1 year ago
இன்றைய வேத வசனம்  06.04.2023: உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்

கிரேக்க தத்துவ ஞானியான பிளாட்டோ தான் மூன்று காரியங்களுக்காக கடவுளுக்கு நன்றி செலுத்த விரும்புவதாகச் சொன்னார்.

முதலாவதாக, தான் மனிதனாக பிறந்ததற்காக, இரண்டாவது, தான் கிரேக்க தேசத்தில் வாழ்வதற்காக, மூன்றாவது, தான் தத்துவ ஞானியாக இருப்பதற்காக தேவபிள்ளைகளே, நீங்கள் நம் தேவனுக்கு எவ்வளவாக நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கிறீர்கள்?

முதலாவது, தேவன் உங்களை தமது சாயலிலே உருவாக்கியதற்காக, இரண்டாவதாக, உலக மக்களிலிருந்து உங்களை தமக்கென்று வேறுபிரித்து அழைத்ததற்காக, மூன்றாவதாக, அவர் தம் இரத்தத்தால் உங்களைக் கழுவி இரட்சித் ததற்காக.

நான்காவதாக, உங்களை அவர் ராஜாக்களும் ஆசாரியர்களுமாக மாற்றியதற்காக... ஐந்தாவதாக, அவர் உலகத்தின் முடிவுபரியந்தமும், சகல நாட்களிலும் உங்களோடுகூட இருப்பதற்காக. ஆறாவதாக, நித்தியத்தைக் குறித்த நல் நம்பிக்கைத் தந்ததற்காக.

ஆ! தேவன் உங்களுக்குத் தந்திருக்கும் பாக்கியத்தை நினைத்து நன்றி செலுத்த ஆரம்பித்தால், ஆயிரம் நாவுகள் உங்களுக்குப் போதாது.

அப் , யோவான் சொல்லுகிறார் "நம்மிடத்தில் அன்புகூர்ந்து, தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும், ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும், வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக" (வெளிப்படுத்தல் 1:6)

"எண்ணிப்பார் நீ பெற்ற பாக்கியங்கள், கர்த்தர் செய்த நன்மைகள்யாவும்” என்று பக்தன் பாடி உங்களை அறிவுறுத்துகிறார். ஆமென்!! அல்லேலூயா!!! 

"பூச்சக்கரத்திலுள்ள எல்லா ஜனங்களிலும், உன் தேவனாகிய கர்த்தர் உன்னைத் தமக்குச் சொந்தமாயிருக்கும்படி தெரிந்துகொண்டார்" (உபாகமம் 7:6)