ராணிப்பேட்டை அருகே 7 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு சத்து மாத்திரைக்கு பதிலாக பூச்சி மாத்திரைகளை வழங்கியதாக குற்றச்சாட்டு

#Pregnant #Women #Hospital #government #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
3 years ago
ராணிப்பேட்டை அருகே 7 மாத கர்ப்பிணி பெண்ணுக்கு சத்து மாத்திரைக்கு பதிலாக பூச்சி மாத்திரைகளை வழங்கியதாக குற்றச்சாட்டு

ராணிப்பேட்டை மாவட்டம் மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஏழு மாத கர்ப்பிணிக்கு சத்து மாத்திரைக்குப் பதிலாக பூச்சி மாத்திரையை கொடுத்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஜெயப்பிரியா என்ற அந்தப் பெண்ணுக்கு பிரேமாகுமாரி என்ற செவிலியர் மாத்திரைகளை வழங்கி வந்துள்ளார். கொடுக்கப்பட்ட மாத்திரைகள் தீர்ந்த நிலையில், புதிய மாத்திரைகளை வாங்கச் ஆரம்ப சுகாதார நிலையம் சென்றுள்ளார் ஜெயப்பிரியா.

அவர் கொண்டு வந்த பழைய மாத்திரை அட்டையைப் பார்த்த மற்றொரு செவிலியர், அது பூச்சி மாத்திரை என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது. அதிர்ச்சியடைந்த ஜெயப்பிரியாவும் அவரது உறவினரும் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மாத்திரை அட்டையின் நிறம் ஒரே மாதிரியாக இருந்ததால் தவறுதலாக வழங்கப்பட்டிருக்கலாம் என மருத்துவமனை தரப்பில் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.

இந்த விவகாரத்தில் செவிலியர் பிரேமாகுமாரியை பணியிடை நீக்கம் செய்துள்ளதாக மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4