பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் நகைகள் காணாமல் போனது தொடர்பாக வீட்டில் பணியாற்றிய ஊழியர்கள் மீது சந்தேகம்

#Robbery #money #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் நகைகள் காணாமல் போனது தொடர்பாக வீட்டில் பணியாற்றிய ஊழியர்கள் மீது சந்தேகம்

பாடகர் விஜய் யேசுதாஸ் வீட்டில் 60 சவரன் நகைகள் காணாமல் போன விவகாரத்தில், வீட்டில் பணியாற்றிய ஊழியர்கள் மீது சந்தேகம் எழுந்துள்ள நிலையில், பீகார், நேபாளத்திற்கு சென்ற இரு ஊழியர்களை சென்னை வரவழைத்து விசாரிக்க, போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

சென்னை அபிராமபுரத்தில் வசித்து வரும் பாடகர் விஜய் யேசுதாஸின் மனைவி தர்ஷனா, வீட்டின் லாக்கரில் வைத்திருந்த நகைகள் காணாமல் போனதாக, கடந்த 30ஆம் தேதி போலீசில் புகாரளித்தார். அதன் பேரில், வீட்டில் வேலை பார்த்த 9 ஊழியர்களிடம் தனித்தனியே போலீசார் விசாரித்தபோது, இரு ஊழியர்கள் பிப்ரவரி மாத இறுதியில் பீகார் மற்றும் நேபாளத்திற்கு சென்றது தெரியவந்தது.

அந்த இரண்டு ஊழியர்களையும் சென்னைக்கு அழைத்து விசாரிக்க திட்டமிட்டுள்ள போலீசார், நகைகள் காணாமல் போய் ஒரு மாதத்திற்கு பின் புகாரளித்ததால் விஜய் யேசுதாஸ் மற்றும் அவரது மனைவியிடமும் விசாரிக்க திட்டமிட்டுள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!