டுவிட்டரில் திடீரென உள்ளே நுழைந்த நாய்: பறந்தது குருவி

#world_news #Twitter #Japan #technology #Tech #Development #Tamilnews #Lanka4
Mayoorikka
3 years ago
டுவிட்டரில்  திடீரென உள்ளே நுழைந்த நாய்: பறந்தது குருவி

டுவிட்டர் செயலியின் லோகோவில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளது.  "நீல நிற குருவிக்கு பதில் நாய்" லோகோவாக மாற்றப்பட்டுள்ளது.

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்தாண்டு ஒக்டோபரில் 44 பில்லியன் டொலருக்கு டுவிட்டரை விலைக்கு வாங்கினார். 

அதனை தொடர்ந்து டுவிட்டரில் பல்வேறு மாற்றங்களை எலான் மஸ்க் ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் டுவிட்டர் செயலியின் லோகோவை எலான் மஸ்க் திடீரென மாற்றம் செய்துள்ளார். "நீல நிற குருவிக்கு பதில் நாய்" லோகோவாக மாற்றப்பட்டுள்ளது.

ஜப்பானின் முக்கிய நாய் இனமான ஷிபா இனுவின் லோகோ வைக்கப்பட்டுள்ளது. Dogecoin எனப்படும் கிரிப்டோகரன்சியின் அடையாளமாக இந்த நாயின் உருவப்படம் உள்ளது. டுவிட்டர் லோகோவை மாற்றி எலான் மஸ்க் மீம்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4