மெரீனாவில் பானிபூரி சாப்பிட்ட இளம்பெண் பறக்கும் ரயிலில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்!
.png)
சென்னையில் பானிபூரி சாப்பிட்ட பெண் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோனிஷா 24 என்ற இளம்பெண் மெரினா கடற்கரையில் பானிபூரி வாங்கி சாப்பிட்டுள்ளார். அதைத் தொடர்ந்து பறக்கும் ரயிலை பிடிக்க படிக்கட்டுகளில் வேகமாக ஏறிச் சென்றுள்ளார். அப்போது அவருக்கு ரயில் நிலையத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர் திடீரென சரிந்து கீழே விழுந்தார்.
இதையடுத்து அவரது தோழிகள் மோனிஷாவை உடனடியாக மருத்துமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகே முழு தகவல் தெரிய வரும் என்றும் கூறுகின்றனர். இது போன்ற உயிரிழப்புகள் சமீபகாலமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.



