இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை நிது கங்காஸ் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

#Sports News #sports #Tamilnews #Breakingnews #ImportantNews
Mani
3 years ago
இந்தியாவின் குத்துச்சண்டை வீராங்கனை நிது கங்காஸ் தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் நிது கங்காஸ் இன்று தங்கம் வென்றார். 13வது உலக மகளிர் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில், 48 கிலோ பிரிவு இறுதிப் போட்டி, இன்று நடைபெற்றது.

இதில் இந்திய வீராங்கனை நிது கங்காஸ் மங்கோலியா வீரர் லூசிஹான் அத்லெட்செட்டை சந்தித்தார். ஆட்டத்தின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய நிது கங்காஸ், இறுதியில் மங்கோலிய வீராங்கனையை 5-0 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப் பதக்கத்தை வென்றார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4