17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில், கைதாகி தப்பி ஓடிய ஆயுதப்படை காவலருக்கு போலீஸ் வலைவீச்சு..!
#Breakingnews
#Tamilnews
#ImportantNews
Mani
2 years ago

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே 17 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் கைதாகி தப்பி ஓடிய ஆயுதபடை காவலர் ஒருவரைத் தேடி வருகின்றனர். பெரம்பலூரில் வசித்துவரும் காவலர் பிரபாகரன், சொந்த கிராமமான சிறுவாச்சூருக்கு சென்றபோது சிறுமியைக் காதலிப்பதாக கூறி கர்ப்பமாக்கியுள்ளார்.
இதுதொடர்பான வழக்கில் போக்சோவில் கைது செய்யபட்ட காவலர், மகளிர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்ற போது போலீசார் பிடியில் இருந்து தப்பி ஓடினார்.
அவரை அழைத்து செல்ல காவல் நிலையத்திற்கு முன்பு ஹெல்மெட் அணிந்தபடி இருச்சக்கர வாகனத்தில் ஒருவர் நிற்பது சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்தது. தப்பிச் சென்ற பிரபாகரனை கைதுசெய்ய போலீசார் முயன்று வருகின்றனர்.



