கேரளா பிரிஞ்சி தோக்கு- செய்வது எப்படி

#Recipe #Cooking #How_to_make
Mani
1 year ago
கேரளா பிரிஞ்சி தோக்கு- செய்வது எப்படி

தேவையான பொருட்கள்:

3 tsp எண்ணெய்
6 கத்திரிக்காய்
2 பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது
10 பல் பூண்டு
1/2 tsp சீரகம்
1/2 tsp சோம்பு
2 தக்காளி அரைத்து எடுத்தது
1 tsp மிளகாய்த்தூள்
1 tsp குழம்பு தூள்
1 tsp மல்லி தூள்
1/4 tsp பெருங்காயம்
1/2 tsp மஞ்சள் தூள்
எலுமிச்சை அளவு புளி கரைத்து எடுத்தது
1 டம்ளர் தண்ணீர்

செய்முறை:

முதலில் கத்திரிக்காயை பொடியாக நறுக்கி எடுத்துக்கொண்டு கடாயில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் நறுக்கி வைத்த கத்திரிக்காயை பொரித்து தனியாக மாற்றி எடுத்துக் கொள்ளவும்.

பின் வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும், வெங்காயம் நன்கு வதங்கி நிறம் மாறிய பின் பூண்டு சேர்த்து வதக்கவும். அதனுடன் சீரகம் சோம்பு சேர்த்து வதக்கவும்.

அடுத்ததாக அரைத்து வைத்த தக்காளியை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு, மிளகாய் தூள், குழம்பு தூள், மல்லித்தூள், பெருங்காயம், உப்பு இவற்றை சேர்த்து மசாலாவின் பச்சை உப்பு போகும் வரை நன்கு கொதிக்க விடவும்.

பின் கரைத்து வைத்த புளித்தண்ணீர் சேர்த்து கடாயை மூடி வைத்து நன்கு கொதிக்க விடவும். மூன்று நிமிடம் கழித்து கடாயை திறந்து பார்த்தால், என்னை தனியாக கடாயை வந்திருக்கும்.

அதோடு எடுத்து வைத்த தண்ணீரை சேர்த்து, நன்கு கலந்து விட்டு கொதித்த உடன், பொறித்து வைத்த கத்திரிக்காயை சேர்த்து, ஒரு பத்து நிமிடம் குறைவான தீயில் ஒரு பிடிக்காமல் கலந்துவிட்டு அதனுடன் மல்லி இலை சேர்த்து கடாயை இறக்கி வைத்தால் சுவையான கத்தரிக்காய் தொக்கு தயார்.