பார்பியையே ஓரங்கட்டிய அந்த உருவம் இப்போது திரையிலும்!!

#ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA #L4
Abi
2 hours ago
பார்பியையே ஓரங்கட்டிய அந்த உருவம் இப்போது திரையிலும்!!

உலகெங்கும் உள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்த 'லபுபு' (Labubu) பொம்மைகளை மையமாகக் கொண்டு புதிய திரைப்படம் ஒன்று உருவாகவுள்ளதாக சீன பொம்மை தயாரிப்பு நிறுவனமான பாப் மார்ட் (Pop Mart) மற்றும் சோனி பிக்சர்ஸ் (Sony Pictures) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன.

நேரடிப் படப்பிடிப்பு மற்றும் கணினி அனிமேஷன் (Live Action & CGI) தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய இந்தத் திரைப்படம் தற்போது ஆரம்பகட்ட பணிகளில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேடிங்டன்' (Paddington) மற்றும் 'வோன்கா' (Wonka) போன்ற வெற்றிப் படங்களை இயக்கிய பால் கிங் (Paul King) இந்த திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

லபுபு கதாபாத்திரத்தை உருவாக்கிய ஹாங்காங் கலைஞர் காசிங் லுங் (Kasing Lung) இந்தப் படத்தின் நிறைவேற்று தயாரிப்பாளராகப் பணியாற்றவுள்ளார்.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு நோர்டிக் புராணக் கதைகளைத் தழுவி உருவாக்கப்பட்ட இந்த 'லபுபு' பொம்மைகள், தற்போது பாப் மார்ட் நிறுவனத்தை 40 பில்லியன் டொலர் பெறுமதியான ஒரு வர்த்தகப் பேரரசாக மாற்றியுள்ளன.

 உலகப் புகழ்பெற்ற பார்பி (Barbie) பொம்மை நிறுவனமான மேட்டலை விடவும் இது அதிக வருவாயைப் பெற்றுள்ளது. பிளக்பிங்க் (Blackpink) குழுவின் லிசா மற்றும் பாடகி ரிஹானா போன்ற சர்வதேச நட்சத்திரங்கள் லபுபு பொம்மைகளைத் தமது பைகளுடன் இணைத்து அணிந்திருந்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வைரலாகியமை இதன் உலகளாவிய புகழுக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

தற்போது நிலவும் லபுபு மோகத்தைப் பயன்படுத்திக் கொண்டு, பாப் மார்ட் நிறுவனம் ஒரு பொம்மை விற்பனையாளராக இருந்து ஒரு பொழுதுபோக்கு நிறுவனமாக மாற இது ஒரு சிறந்த சந்தர்ப்பம்" என சந்தைப்படுத்தல் நிபுணர்கள் கருதுகின்றனர்.

அண்மையில் சீன அனிமேஷன் படங்களான 'Ne Zha 2' மற்றும் 'Black Myth: Wukong' ஆகியவற்றின் வெற்றியைத் தொடர்ந்து, லபுபு திரைப்படமும் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!