ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது: தேர்தலிலும் போட்டியிட முடியாது
#India
#Parliament
#Tamilnews
#TamilNadu Police
#Lanka4
Mayoorikka
2 years ago

எம்.பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதிநீக்கம் செய்யப்படுவதாக மக்களவை செயலகம் அறிவித்துள்ளது.
காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தேர்தல் பிரசாரத்தின் போது இந்திய பிரதமர் நரேந்தி மோடியின் பெயரை பயன்படுத்தி பேசியது சர்ச்சையானதை தொடர்ந்து அவருக்கு குஜராத் சூரத் நீதிமன்றம் நேற்று 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது.
இதையடுத்தே அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டுள்ளது.
மேலும், ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளதால் அவர் 8 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தண்டனை காலமான 2 வருடம் மற்றும் அதற்குப்பின்னரான 6 ஆண்டுகள் என 8 வருடங்களுக்கு அவருக்கு தேர்தலில் போட்டியிட முடியாது என்றும் குறிப்பிடப்படுகின்றது.



