தமிழகத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

#Tamil Nadu #Tamilnews #Fisherman #Arrest
Mani
2 years ago
தமிழகத்தைச் சேர்ந்த 12 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவது அதிகரித்து வருவது பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு அருகே புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த 12 மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, ​​எல்லை தாண்டியதாகக் கூறி 2 படகுகளில் வந்த 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மேலும் மீனவர்களிடம் இருந்து 2 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இலங்கை கடற்படையினரால் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து புதுக்கோட்டையில் உள்ள மீனவ கிராமங்கள் கொதிப்படைந்துள்ளன.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!