திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தெலுங்கு புத்தாண்டையொட்டி ஆழ்வார் திருமஞ்சனம் விழா கொண்டாடப்பட்டது.
#India
#Thirumal
#Temple
Mani
2 years ago
-1-1-1.jpg)
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தெலுங்கு வருட பிறப்பு முன்னிட்டு, ஆழ்வார் திருமஞ்சனம் சிறப்பாக நடைபெற்றது.
ஆகம சாஸ்திர முறைப்படி நடைபெற்ற இந்த விழாவானது மூலவர் சன்னதி, பலிபீடம், கொடிமரம், விமான கோபுரம் உள்ளிட்ட கோயிலின் உள்சுவர்களைச் சுத்தப்படுத்தும் பணி நடைபெற்றது. சுவர்கள் வாசனை திரவியங்கள், சந்தனம், குங்குமப்பூ மற்றும் பிற வாசனைகளின் கலவையால் நறுமணப்படுத்தப்பட்டன.
இதில் தேவஸ்தான நிர்வாகிகள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.



