பேக்கரியில் செய்யும் முட்டை பப்ஸ் வீட்டிலேயே செய்ய டிப்ஸ்..!

#Cooking #Recipe #2023
Mani
1 year ago
பேக்கரியில் செய்யும் முட்டை பப்ஸ் வீட்டிலேயே செய்ய டிப்ஸ்..!

தேவையான பொருட்கள்:

1/4 KG மைதா மாவு 
1 tbsp நெய் 
1 tbsp எலுமிச்சை சாறு 
6 முட்டை 
1 பெரிய வெங்காயம் 
3 பச்சை மிளகாய் 
1 tsp கரம் மசாலா 
1/4 tsp மிளகாய் 
1 தூள் 
1 கைப்பிடி கொத்தமல்லி இலை
தேவையான அளவு உப்பு 

செய்முறை:

முதலில் மைதா மாவுடன் உப்பு மற்றும் நெய் சேர்த்து கைகளால் நன்கு பிசைந்து கொள்ளவும். பிறகு எலுமிச்சை சாறு சேர்த்து தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து சேர்த்து தண்ணீரை சிறிது சிறிதாக தெளித்து கொள்ளவும்.

பின் பூரி மாவு பதத்திற்கு மாவை மென்மையாக பிசைந்து பத்து நிமிடம் குளிர்சாதன பெட்டியில் ஊற வைத்து கொள்ளவும்.

பின் 10 நிமிடம் கழித்து வெளியில் எடுத்து பூரிக் கட்டையில் தேய்க்கவும். பிறகு நெய்யை தேய்த்து வைத்துள்ள சப்பாத்தியின் மேல் தடவி நான்காக மடித்து கொள்ளவும்.

பின் அதை மறுபடியும் குளிர்சாதனப் பெட்டியில் பத்து நிமிடம் வைக்கவும் எல்லா மாவையும் இதேபோல் செய்து வைக்கவும்.

மூன்றாவது முறையாக ரொட்டியை தேய்த்து நெய்யை தடவி மடித்து சமமாக தேய்த்து செவ்வக துண்டுகளாக போடவும். பின் ஐந்து முட்டைகளை வேகவைத்து தோலை உரித்து இரண்டாக முட்டைகளை கொள்ளவும்.

பின் ஒரு கடாயில் இரண்டு டீஸ்பூன் எண்ணெயை ஊற்றி நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை போட்டு வதக்கவும். பிறகு மிளகாய் தூள், கரம் மசாலா, உப்பு, மிளகாய் தழை ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி வைக்கவும்.

பிறகு பப்ஸ் துண்டுகளில் முட்டை துண்டினை ஒரு புறம் வைத்து அதனுடன் வதக்கிய கலவையை சேர்த்து வைத்து மறு புறத்தை மூடவும். பிறகு அவனில் வைக்ககூடிய புறத்தை பப்ஸ்ஸை பரப்பி வைத்து அவனை 400 டிகிரிக்குள் சூடாக்கி அரைமணி நேரம் வைக்கவும்.

பிறகு அவனின் வெப்பத்தை பாதியாக குறைத்து வைத்து பத்து நிமிடம் வைத்திருக்கவும் பின் பப்ஸ் நன்கு வெந்து பொன்னிறமாக ஆனவுடன் வெளியில் எடுத்து பரிமாறவும்.