இராணுவ முகாமிலிருந்த துப்பாக்கியுடன் தலைமறைவான சிப்பாய்
#Investigation
#Police
#Sri Lankan Army
#SriLanka
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago

பனாகொட இராணுவ முகாமில் இருந்து T56 துப்பாக்கி மற்றும் 90 தோட்டாக்கள் அடங்கிய 3 மகசீன்களை திருடிய இராணுவ சிப்பாய் ஒருவரைக் கண்டறிய கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதன்படி, விசாரணைகளின் போது சந்தேகத்திற்குரிய இராணுவ வீரர் துப்பாக்கியுடன் கொடகமவில் உள்ள விகாரைக்கு வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
ஆலயத் தலைவருடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்த குறித்த இராணுவச் சிப்பாய், துப்பாக்கியை எடுத்துச் செல்வதற்கான பையொன்றை ஆலயத் தலைவரிடம் கேட்டுவிட்டு ஓடியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இராணுவச் சிப்பாய்க்கு உதவியதன் கீழ் சந்தேக நபர் கைது செய்யப்பட்டு ஹோமாகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.



