1894 சுற்றுலா பயணிகளுடன் கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்ட பிரின்சஸ் குரூஸ்

#Colombo #SriLanka #sri lanka tamil news #Lanka4
Prathees
2 years ago
1894 சுற்றுலா பயணிகளுடன்  கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிட்ட பிரின்சஸ் குரூஸ்

1,894 சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு பிரின்சஸ் குரூஸ் என்ற சொகுசு பயணிகள் கப்பல் இன்று காலை கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.

தாய்லாந்தில் இருந்து இலங்கைக்கு வந்த இந்தக் கப்பலில் 906 பணியாளர்கள் இருப்பதாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அந்தக் கப்பலில் இருந்து 150 சுற்றுலாப் பயணிகள் கண்டி, பின்னவல, நீர்கொழும்பு மற்றும் இங்கிரிய ஆகிய பகுதிகளுக்குச் சென்று வருகின்றனர்.

பெர்முடா கொடியின் கீழ் பதிவு செய்யப்பட்ட 294 மீட்டர் நீளமும், 37 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பல் அமெரிக்க நிறுவனத்திற்கு சொந்தமானது.

பிரின்சஸ் குரூஸ் சொகுசு பயணிகள் கப்பல் இன்று இரவு 7:30 மணிக்கு துபாய்க்கு புறப்பட உள்ளது.

இந்த கப்பல் சில வருடங்களுக்கு முன்னர் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்றை இலங்கைக்கு அழைத்து வந்ததாக இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!