நடிகை ரம்பாவின் கணவர் இந்திரன் யாழில் உலகத்தரம் வாய்ந்த தனியார் பல்கலைகழகம் ஒன்றை நிறுவுகிறார்.

தென்னிந்திய முன்னாள் நடிகை ரம்பாவின் கணவரும், கனேடிய தொழிலதிபரும் சுதுமலை மானிப்பாயை பிறப்பிடமாகக் கொண்ட திரு.இந்திரன் பத்மநாதன் அவர்கள், இலங்கை தகவல் தொழில்நுட்பத்துடன் இணைந்த கல்வி சார்ந்த இந்த முயற்சியை யாழ் மண்ணில் நிறுவுகிறார்.

இலங்கையின் மிகப் பெரிய அரசு சார்பற்ற பட்டப்படிப்பினை வழங்கும் நிறுவனமான SLIIT இனது கூட்டமைவானது Northern Uni ஊடாக இலங்கையின் பிரபல்யமான தகவல் தொழில் நுட்பம், மற்றும் வர்த்தக முகாமைத்துவ கற்கைகளை யாழ்நகரில் வழங்கவுள்ளது.
Northern பல்கலைக்கழகமானது , தகவல் தொழில்நுட்ப கற்கையில் 7 சிறப்பு பட்டங்களையும், வணிக முகாமைத்துவத்தில் 4 சிறப்புப் பட்டங்களையும் வழங்கவுள்ளது எனக் கூறப் படுகிறது.
மேலும் ,அடுத்த சில ஆண்டுகளில் பொறியியல், உயிரியல் தொழில் நுட்பம், சுகாதார பராமரிப்பு போன்ற துறைகளை உள்ளடக்கு வதோடு, பத்தாயிரம் மாணவர் களை உள்ளடக்கக் கூடிய திட்டத்தையும் கொண்டுள்ளது.
இதன் அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.




