நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் தமிழர்களுக்கு புதியதல்ல: இந்திய ஊடகம்

#SriLanka #Sri Lanka President #Tamil People #Tamil #srilankan politics #Hindu #Lanka4
Mayoorikka
2 years ago
நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் தமிழர்களுக்கு  புதியதல்ல: இந்திய ஊடகம்

இலங்கையில் கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்டாத வாக்குறுதிகளைக் கண்ட தமிழர்கள், நியாயமான மற்றும் நீடித்த அரசியல் தீர்வைக் காண்பதற்கான அரசியல் விருப்பம் தென்னிலங்கை சிங்கள நிர்வாகத்துக்கு இல்லை என்று வாதிடுவதாக த ஹிந்து தெரிவித்துள்ளது.

இலங்கையில் தீர்வுக்காணப்படாமல் உள்ள இனப்பிரச்சினைக்கு தீர்வு காண இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விதித்திருந்த காலக்கெடு ஒரு மாதத்திற்கு முன் முடிவடைந்த நிலையிலேயே இந்த வாதம் முன்வைக்கப்பட்டுள்ளதாக த ஹிந்து குறிப்பிடுகிறது.

ஜனாதிபதி ரணிலின் அறிவிப்பை அடுத்து, கடந்த பெப்ரவரி ஆரம்பத்தில், காவி உடை அணிந்த பௌத்த பிக்குகள் குழு ஒன்று இலங்கை நாடாளுமன்றத்திற்கு அருகில் ஒன்று கூடி 13வது திருத்தச் சட்டத்தின் நகலை எரித்தனர். 

முன்னதாக 13ஐ அமுல்படுத்துவது தமது பொறுப்பு என்று ரணில் விக்கிரமசிங்க, அனைத்துக்கட்சி மாநாட்டில் தெரிவித்திருந்தார்.

37 ஆண்டுகளாக, 13வது திருத்தம் அரசியலமைப்பின் ஒரு பகுதியாக உள்ளது 

எனவே தாம்  செயல்படுத்த வேண்டும் அல்லது யாராவது அதை ஒழிக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

அத்துடன் 'நாட்டைப் பிரிக்கத் தயாராக இல்லை' என்றும் 'சிங்கள தேசத்தைக் காட்டிக் கொடுக்கப் போவதில்லை' என்று அவர் லியுறுத்திய போதிலும், பௌத்த பிக்குகள் அதை எதிர்த்தனர்.

இந்தநிலையில் நிறைவேற்றப்படாத ஜனாதிபதி விக்கிரமசிங்கவின் உறுதிமொழியோ அல்லது பிக்குகளின் எதிர்வினையோ இலங்கையர்களுக்கு புதியதல்ல என்று தெ ஹிந்து தெரிவிக்கிறது.

மஹிந்த ராஜபக்ஷ உட்பட கடந்த ஜனாதிபதிகள் ஒரே வாக்குறுதியை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் வழங்கியுள்ளனர். 

துறவிகளும் பிற பிற்போக்குக் குழுக்களும் இதேபோல் அப்போதும் கிளர்ந்தெழுந்தனர். 

அதே சமயம், சமத்துவம், கண்ணியம், சுயநிர்ணய உரிமை ஆகியவற்றை தொடர்ந்து கோரி வரும் இலங்கைத் தமிழர்கள், வாக்குறுதிகள் உண்மையாக நிறைவேற்றப்படும்போது, அது எப்படி இருக்கும் என்று தெரியவில்லை என்று குறிப்பிடுவதாக தெ ஹிந்து தெரிவித்துள்ளது. 

ஏறக்குறைய நான்கு தசாப்தங்களாக அரசமைப்புச் சட்டத்தில் அதிகாரப் பகிர்வு உள்ளடக்கப்பட்டிருந்த போதிலும்,இதுநாள் வரையில் எழுத்து மற்றும் உணர்வுடன் சட்டம் நடைமுறைப்படுத்துவதை தமிழர்கள்; பார்த்ததில்லை.

13வது திருத்தம் எப்போதும் சர்ச்சைக்குரியது. அதை எதிர்க்கும் சிங்களவர்கள், இந்த சட்டம் ஒரு 'இந்திய திணிப்பு' என்றே கருதுகின்றனர்.

இது மாகாண மட்டத்தில் தமிழர்களுக்கு 'அதிக அதிகாரத்தை' அடையாளப்படுத்துகிறது மற்றும் கொழும்பில் மத்திய அரசாங்கத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது என்ற கருத்து சிங்களவர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டுள்ளது. 

எனினும் இந்தத் திருத்தம் ஒன்பது மாகாணங்களுக்கும் ஒரே அளவிலான அதிகாரப் பகிர்ந்தளிப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது என்ற உண்மையை அவர்கள் இன்று புறக்கணித்து வருகின்றனர்.

மறுபுறம், தமிழர்கள், இலங்கையின் ஒற்றையாட்சி அரசியலமைப்பின் கீழ், மிகவும் மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரங்களை உள்ளடக்கியதாக, அர்த்தமுள்ள அதிகாரப்பகிர்வு என்று இதனைக் கருதுகின்றனர். 

எல்லாவற்றிற்கும் மேலாக, 13 வது திருத்தம் தற்போது சில அதிகாரப் பகிர்வுக்கான ஒரே சட்டமன்ற உத்தரவாதம் என்பதால் சிலர் இதை மிகவும் ஆரோக்கியமான மற்றும் நீடித்த அரசியல் தீர்விற்கான பேச்சுவார்த்தைகளில் ஒரு 'ஆரம்பப் புள்ளியாக' பார்க்கிறார்கள்  என்று தெ ஹிந்து தெரிவிக்கிறது.

இதேவேளை 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துவதாக இலங்கை ஜனாதிபதி அளித்த வாக்குறுதி ஏற்கனவே மறந்து போய்விட்டது.
இன்று இலங்கையின் மேலாதிக்க தலைப்புச் செய்திகள் சர்வதேச நாணய நிதியத்தின் 'பிணை எடுப்புப் பொதி' பற்றியதாகவே இருக்கிறது.

எனவே நாட்டின் தீர்க்கப்படாத இனப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படலாம் என்பதற்கான அறிகுறியே இல்லை.

இதற்கிடையில், இலங்கையின் தமிழர் தேசியப் பிரச்சினையில் இந்தியா வரலாற்று ரீதியாக நடுவராக இருந்து வந்தாலும், தமிழ் அரசியல் மற்றும் சமூகத்தில் உள்ள பலர், இந்தப் பிரச்சினையில் புதுடெல்லியின் ஆர்வமும் - செல்வாக்கும் - குறைந்து வருவதாகக் கூறுகின்றனர். 

இலங்கையில் சீனச் செல்வாக்கை எதிர்கொள்வதில் முன்கூட்டிய ஆக்கிரமிப்பில் ஈடுபட்டுள்ள இந்தியா, 13வது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டியதன் அவசியத்தை வழமையான அறிக்கைகளை விட எதனையும் செய்வதில்லை என விமர்சகர்கள் வாதிடுகின்றனர் என்று த ஹிந்து தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!