டொலரை பதுக்கி வைத்திருந்தவர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு!

#SriLanka #Dollar #Finance #sri lanka tamil news #people #People's Bank #Lanka4
Mayoorikka
2 years ago
டொலரை பதுக்கி வைத்திருந்தவர்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு!

அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமையினால் டொலரை பதுக்கி வைத்திருந்தவர்களுக்கு பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

கடந்த மார்ச் முதலாம் திகதி அமெரிக்க டொலர் ஒன்றின் பெறுமதி 360 ரூபாவாகவே இருந்தது. ஆனால் கடந்த 3 நாட்களாக அமெரிக்க டொலரின் விலை வேகமாக சரிந்தது.

டொலரின் பெறுமதி மேலும் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்கள் கையில் இருந்த டொலரை ரூபாய்க்கு மாற்றுவதற்காக, பண பரிவர்த்தன நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் மக்கள் நிற்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

 அதிக பெறுமானத்துக்கு டொலரை மாற்றிக் கொள்வதற்கு பலர் வெவ்வேறு பரிவர்த்தனை நிலையங்களை நாடியிருந்தமையும்  காணக்கூடியதாக உள்ளது.

இதேவேளை இலங்கையில் கடந்த மாதங்களில் கடவுச்சீட்டை சமர்ப்பித்தவர்களுக்கு மாத்திரமே,டொலர் பரிவர்த்தனை செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!