17 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் 39 வயதுடைய பெண் ஒருவர் கைது
#Death
#Police
#Arrest
#Women
#Lanka4
Kanimoli
2 years ago

ராகம பிரதேசத்தில் 17 வயது சிறுமியை கொடூரமாக தாக்கிய சம்பவம் தொடர்பில் 39 வயதுடைய பெண் ஒருவர் ராகம காவல்துறையினரால்; கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த பெண் சிறுமியின் மாற்றாந்தாய் எனவும் அவரது தந்தை வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிசிடிவியில் பதிவாகி சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட சம்பவம் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக ராகம காவல்துறையினல்; பல முறைப்பாடுகள் செய்யப்பட்டதையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டார்.
பின்னர் வெலிசர நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், மார்ச் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.



