எரிபொருள் விற்பனையில் வீழ்ச்சி! பெற்றோலிய கூட்டுத்தாபனம்
#SriLanka
#Fuel
#prices
#sri lanka tamil news
#Tamilnews
#Lanka4
Mayoorikka
2 years ago

டீசல் விற்பனை 50 வீதத்தாலும் பெற்றோல் விற்பனை 30 வீதத்தாலும் குறைந்துள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாத விற்பனையை 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாத விற்பனையுடன் ஒப்பிடும் போது இந்த தகவல் தெரியவந்துள்ளதாகவும், லங்கா ஆட்டோ டீசல் விற்பனை 50 சதவீதத்தாலும், பெட்ரோல் விற்பனை 30 சதவீதத்தாலும், மண்ணெண்ணெய் விற்பனை 70 சதவீதத்தாலும் குறைந்துள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேலும் தெரிவிக்கிறது.



