உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்த ஜனக ரத்நாயக்க!
#SriLanka
#Electricity Bill
#Court Order
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

மின்சார கட்டணத்தை திருத்தும் தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை சமர்ப்பித்துள்ளார்.
பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை, சட்டமா அதிபர் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
மின்சார கட்டணத்தை திருத்துவதற்கு இலங்கை மின்சார சபை எடுத்த தீர்மானம் சட்டவிரோதமானது எனவும் அடிப்படை மனித உரிமைகள் மீறப்படுவதாக தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



