கண்ணீர்ப் புகை உள்ளிட்ட பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிராக மாணவர்கள் ஆர்ப்பாட்டம்!
#SriLanka
#Protest
#Sri Lankan Army
#Police
#Student
#students
#College Student
#Lanka4
Mayoorikka
2 years ago

கண்ணீர் புகை குண்டு வீச்சு உள்ளிட்ட போராட்டங்களுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்ட அடக்குமுறைக்கு எதிராக பல்கலைக்கழக மாணவர் சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் இன்று (10) பிற்பகல் பம்பலப்பிட்டி, தும்முல்லை சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இராணுவத்தினர் மற்றும் பொலிஸாரின் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் மாணவர்களை கண்ணீர் புகை குண்டுகள் வீசி, பல்கலைக்கழகங்களுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்கியமை போன்றன அந்த போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக கொழும்பில் தும்முல்லை சந்தி, கொழும்பு பல்கலைக்கழகம் உட்பட பல இடங்களில் இன்று காலை முதல் பெருமளவிலான பொலிஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.



