பிதுருதலாகல வனப்பகுதியில் ஒருவர் சடலமாக மீட்பு

#Death #Tamil #Tamil People #Tamilnews #water #Body #sri lanka tamil news
Prabha Praneetha
2 years ago
பிதுருதலாகல வனப்பகுதியில் ஒருவர் சடலமாக மீட்பு

நுவரெலியா, பிதுருதலாகல வனப்பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபரொருவரின் சடலம் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
 
நுவரெலியா பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
 
நேற்று பிதுருதலாகல வனப்பகுதியில் விறகு சேகரிப்பதற்காக வீட்டை விட்டுச் சென்ற அவர் வீடு திரும்பாததால் பிரதேசவாசிகள் தேடிய போதே 72 வயதுடைய நபரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
 
நீதவான் விசாரணைகளுக்காக சடலம் பொலிஸ் பாதுகாப்பில் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!