முல்லைத்தீவில் போலியான ஐயாயிரம் ரூபா தாள்களுடன் ஒருவர் கைது!
#SriLanka
#Mullaitivu
#Arrest
#Police
#Crime
#Tamilnews
#sri lanka tamil news
#Lanka4
Mayoorikka
2 years ago

முல்லைத்தீவு புதுக்குடு இருப்பு தேவபுர பிரதேசத்தில் 700 போலியான ஐயாயிரம் ரூபா நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்.
சந்தேக நபரின் வீட்டில் இருந்து போலி நாணயத்தாள்களை அச்சிட பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கணினி மற்றும் சாதனங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.



